Tuesday, August 25, 2009

இது எப்படி இருக்கு?

வழக்கம்போல் ஒரு நாள் பேரங்காடிக்குச் சென்றிருந்தேன்.
கொஞ்சம் நிறைய பொருட்கள் வாங்க வேண்டியிருந்ததால் தள்ளுவண்டியை உபயோகித்துக்கொள்ளலாமே என்று நினைத்து ஒரு வெள்ளி நாண‌யத்தைத் தேடினேன். இரண்டு ஐம்பது காசு நாண‌யங்கள் தான் கிடைத்தது. இம்மாதிரி சமயங்களில் தள்ளுவண்டியை உபயோகித்துவிட்டு திரும்பக் கொண்டு வந்து வைப்பவர்களிடம் காசைக் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொள்வது வழக்கம்.

அன்றும் அது போல் திரும்ப வைக்க வந்த ஒரு பெண்மணியிடம் காசைக் கொடுத்து விட்டு வண்டியைக் கேட்டேன். அவரும் தந்துவிட்டு ஒரு ஐம்பது காசையும் திரும்பத் தந்துவிட்டு, தான் அந்த தள்ளுவண்டியை கடையின் உள்ளேயிருந்து எடுத்ததாகவும், அதற்குப் பணம் எதுவும் செலுத்தவில்லையென்றும்,அதனால் ஐம்பது காசு மட்டும் போதுமென்றும் கூறிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்.

நானும் சிந்திக்காமல் பொருட்கள் வாங்கும் அவசரத்தில் கடைக்குள் விரைந்தேன். எல்லாம் வாங்கி முடித்துவிட்டு தள்ளுவண்டியை திரும்பக் கொண்டு வந்து வைக்கும்போது தான் அதில் நாணயமே இல்லை என்பதை உணர்ந்தேன்.
ஒரு வெள்ளி நாணயத்தை (ஒழுங்காகச்)செலுத்திவிட்டு உபயோகித்தபின் திரும்ப வைத்துவிட்டு அந்த ஒருவெள்ளியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் ஓர் இலவசச் சேவைக்கு நான் ஐம்பது காசை இழந்திருக்கிறேனே என்று என்னை எண்ணி நானே நொந்து கொண்டேன்.
ஆனால் பணமே செலுத்தாமல் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாமல் என்னிடமிருந்தும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டு போய்விட்டாரே அந்தப் பெண்மணி? இது எப்படி இருக்கு?

2 comments:

raadh said...

இதுதானே உலகம்! இதுதானே வாழ்க்கை! யார் இழக்க வேண்டும், யார் பெற வேண்டும் என்று எப்பொழுதும் நியதி இருப்பதில்லை! நல்ல, சுவாரசியமான கதை! (வேடிக்கையும் கூட!)
சசி! (LOL)

Gomathi said...

நல்ல பாடமும் கூட! வருகைக்கு நன்றி!