இத்திரைப்படத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. ( Thanks to Nivetha G ) பல விருதுகளை வென்ற, வெல்லவிருக்கும் திரைப்படமாகப் பேசப்படுவதால் மிகுந்த ஆவலுடன் படத்தைப்பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்று நினைத்தால் அதுதான் இல்லை. கிட்டத்தட்ட ஒரு முழு ஆங்கிலப்படம் போல் தான் இருக்கிறது. படத்தின் கதை கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் அதை மீண்டும் இங்கே சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.
மற்ற படங்களிலிருந்து இது ரொம்பவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
நிஜமான சேரிவாழ் சிறுவர்களையே நடிக்க வைத்திருப்பது,
யதார்த்தமான நிகழ்வுகளை மிகைப்படுத்தாமல் காட்டியது( ஒரே ஒரு காட்சியைத்தவிர ),
தேவையில்லாத காட்சிகள் எதையும் திணிக்காதிருந்தது,
காதைக்கிளிக்காத காட்சிக்கேற்ற பிண்ணனி இசை,
கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு,
கதைக்குத்தேவையற்ற நகைச்சுவை(என்று சொல்லப்படும்) காட்சிகள் எதையும் சேர்க்காதது,
ஹீரோயிசத்தை நிரூபிக்க பறந்து பறந்து போடும் சண்டைக்காட்சிகள் இல்லாதது,
மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடி ஆடுவது போன்ற காட்சிகள் இல்லாதது,
இப்படிப் பல வித்தியாசங்களைக் கொண்டுள்ளது.
ஆனால் கதையின் தலைப்பில் மட்டும் ஏன் இப்படியொரு தவறிழைத்தார்கள்? இந்த ஒரு காரணத்திற்காகவே விருது நிராகரிக்கப் பட்டிருக்கவேண்டும். ஒரு இந்தியனை மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலுள்ளவர்களை அவ்வாறு அழைத்திருந்தாலும் அது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மனிதனை மனிதன் இழிவு செய்வது மொத்த மனிதகுலத்துக்கே அவமானம்!
1 comment:
I have not seen the movie yet... so no comments on the movie!
But the person who helped you watch the movie did not help me :(
Post a Comment