நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நான்!
இடை வேளையில் என் மனதில் தோன்றியவை ஏராளம்!
என்றாலும் மனதின் வேகம் செயலில் இல்லாததால்
இதோ தாமதமாய் உங்கள் முன்னே!
முதலில் என் நன்றி வார்த்தைகள் சிலருக்கு!
தன் வலைப்பூப் பக்கத்தில் என் அரும்புக்கும் அங்கீகாரம் தந்த பெருந்தகைக்கு என் முதல் நன்றி!
தன் நூறாம் பதிப்பில் தன் பலம் பலரறியப் பறைசாற்றிவிட்டு
என்னையும் வியந்துரைத்த மயிலுக்கு என் நன்றி!
ஒரு சில வாழ்த்துக்கள்!
ஓ' நிலைத்தேர்வில் நல்ல புள்ளிகள் பெற்றுத் தேறிய
மகள் லாவண்யாவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
ஓ' நிலைத் தமிழ்த்தேர்வெழுதி சிறந்தமுறையில் தேர்வு பெற்ற
ஸ்ரேயாஸ், நிவேதா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்!
இரண்டு புள்ளிகள் பெற்று மிகச்சிறந்த தேர்வு பெற்ற
கீர்த்தனாவுக்கும் என் பாராட்டுக்கள்!
மேலும் நல்ல புள்ளிகளுடன் தேர்வு பெற்ற நாச்சியம்மை, மீனாட்சி, ஆர்த்தி, சக்தி....அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!
அனைவரும் கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!
பொங்கல் வாழ்த்துக்கள்!
அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
பொங்கலும் போய்விட்டது!
பொங்கல் போனால் என்ன?வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு!
தை பிறந்தால் வழி பிறக்கும்!
நல்வழி பிறந்து வாழ்வு சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
2 comments:
'O' நிலைத் தேர்வில் மிகச் சிறப்பாக செய்த பிள்ளைகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! தேர்வு, மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கடந்து அவர்கள் வாழ்வில் தங்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களையும் மிஞ்சி உயர்ந்து சிறந்து விளங்க வாழ்த்துவோம்!
thanks and welcome!
Post a Comment