எண்ணங்கள் ஈடேற
எதிர்பார்ப்புகள் கைகூட
பிறந்தது புத்தாண்டு
ஈராயிரத் தொன்பது!
மாற்றங்கள் தந்தது
ஈராயிரத் தெட்டு!
ஆம்!
ஒன்றாய் உட்காரவே
அனுமதி மறுக்கப்பட்ட இனம்(நிறம்)
உலகாளும் அரியணையில்
ஒய்யாரமாய் இன்று!
இது போன்ற மாற்றங்கள்
ஏராளம் நிகழட்டும்!
ஈராயிரத் தொன்பது
ஏமாற்றா திருக்கட்டும்!
புத்தாண்டு தீர்மானங்கள்
சத்தான தாகட்டும்!
எத்தடை வந்தாலும்
எதிர்த்து மனம் நிற்கட்டும்!
சுற்றுப்புறம் சிறக்கட்டும்!
சுற்றமெல்லாம் விளங்கட்டும்!
காற்றும் நீரும்
புனிதமாகட்டும்!
நோயற்று மாந்தரும்
நீடூழி வாழட்டும்!
கல்வியொடு செல்வமும்
வீரமும் சேரப் பெற்று
எல்லோரும் வாழ்ந்திட
என் வாழ்த்துப் பலிக்கட்டும்!
2 comments:
இப்புத்தாண்டில் தங்கள் இல்லத்தில் அனைவரும் உடல் நலம், கல்வியில் மேன்மை, பெருஞ்சிறப்பு, பொருட்செல்வம் இவை அனைத்தும் பெற்று மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துகிறோம் - U, R & V. இணையத்தில் தங்கள் தமிழ்ச்சேவை தொடரட்டும். Best Wishes!
Thanks a lot to U,R & V and wishing you the same.
Post a Comment