Tuesday, October 14, 2008

நகைச்சுவைத் துணுக்கு

நான் சமீபத்தில் ஒரு வார இதழில் படித்து ரசித்த ஜோக் இது.

புதிதாய் திருமணமான ஒருவன் அலுவல் காரணமாக மனைவியைப் பிரிந்து வேறு ஒரு நாட்டுக்குச் செல்ல நேரிட்டது.

அவன் அங்கு சென்று சேர்ந்ததும் தான் வந்து சேர்ந்து விட்ட செய்தியை மனைவிக்கு தெரிவிக்கவேண்டுமே என்று நினைத்துக்கொண்டே அவன் தங்கவிருக்கும் ஓட்டல் அறைக்கு வந்தான்.

என்ன ஆச்சரியம்! அந்த அறையில் இணைய வசதி இருந்தது. அவன் மிகுந்த சந்தோசத்துடன் மனைவிக்கு மின் அஞ்சல் அனுப்பினான். என்ன ஒன்று, அவசரத்தில் அட்ரஸைத் தான் தவறாக எழுதி, இல்லையில்லை தவறாக அடித்துவிட்டான்.

வேறொரு வீட்டில் ஒரு பெண், அப்போது தான் தன் கணவனைப் பறிகொடுத்துவிட்டு, அவனுடைய கடைசி காரியங்களை செய்து முடித்துவிட்டு வீடுதிரும்பியிருந்தாள்.

கணவன் இறந்த செய்தியை அறிந்து, வந்திருக்கும் இரங்கல் கடிதங்களைப் படிக்கலாம் என்று மின் அஞ்சலைத் திறந்தாள்.

வந்திருந்த முதல் கடிதத்தைப் படித்தவுடனேயே மூர்ச்சையடைந்து விட்டாள்.கடிதத்தில் இருந்த செய்தி,

" அன்பே, நான் இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். என் பிரிவு உனக்கு மிகவும் கவலையளிக்கும். எனக்கும் அப்படியே. கவலை வேண்டாம்! இங்கு கணினி,இணைய வசதிகள் எல்லாம் இருக்கிறது. நான் தினமும் மின் அஞ்சல் வழி தொடர்பு கொள்கிறேன். இப்படிக்கு, உன் அன்புக் கணவன்".

2 comments:

raadh said...

நான் இதே துணுக்கை சற்று வேறு விதமாகப் படித்துள்ளேன் -
அவன் மனைவியும் சில நாட்களில் அந்த ஊருக்கு வந்து அவனுடன் சேர்வதாக ஏற்பாடு. அதனால் மின்னஞ்சலின் கடைசியில் இப்படியும் எழுதியிருந்தான் - "கவலைப்படாதே! சீக்கிரம் நீயும் இங்கு வந்துவிடுவாய். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" (!!!!!!!!)

Gomathi said...

மிகவும் சரியாகத்தான் எழுதியிருக்கிறான்.
எல்லா கணவர்களும் தங்கள் மனைவியோடு இருப்பதைத்தானே விரும்புவார்கள்!