Tuesday, October 7, 2008

அவர்கள்.....

ஆம்...அவர்கள் மூவரும் சீனப்பெண்கள்.
எழுபதைத் தாண்டிய மூதாட்டிகள்; இருப‌துகளின் வழிகாட்டிகள்.

தினமும் அதிகாலையிலேயே எழுந்து உடற்பயிற்சித் தளத்திற்கு வந்துவிடுவார்கள்.மழை நாட்கள் தவிர மற்ற நாட்களில் எல்லாம் தவறாமல் வருவார்கள்.

நானும் என் கணவரும் அவர்கள் வந்தபிறகு தான் அங்கு சென்று சேர்வோம்.காலை வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டு மிகவும் சுறுசுறுப்பாக அவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கும்போது, 'கடமையே.....' என்று என் கணவரைப் பின் தொடரும் எனக்கும் ஒரு உற்சாகம் பிறந்துவிடும்.(முப்பதுகளுக்கும் முன்னோடிகள் அவர்கள்).

சிறிது நேரம் உடற்பயிற்சிக்குப்பின் அங்கேயிருக்கும் நீள்நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு ( பின்னே அது இல்லாமலா? அவர்களும் பெண்கள்தானே?) கலைந்து செல்வார்கள்.உடல் நலத்தோடு மன ந‌லத்தையும் இதன் மூலம் பெறுகிறார்கள்.

அவர்களைப்போல பல சீன மூதாட்டிகளை பரவலாக அங்கு பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு இந்திய மூத்த குடிமகனை/ளையோ கூட பார்க்கமுடியவில்லை.(என்னுடைய ஆதங்கம்).

நான் மேற்கூறிய பெண்கள் மூவரும் என் கணவருக்கு மட்டுமல்ல, எனக்கும் நண்பர்கள்தான். பின் ஏன் அப்படிச் சொன்னேன்?

கண்ணுக்கு மையழகு.....
அடுத்த வரி......?
அதேதான்.
சும்மா!

6 comments:

Nivedha G said...

haha...that was really really nice to read...i love the way you phrase your sentences...and seriously, i think you should have become an author...well, it's never too late!

keep up the awesome work(:

Gomathi said...

thanks a lot nivedha!

sudha said...

ஹ‌ ஹ ஹா !!!

இருபது ஆண்டுகளுக்குப் பின் ..‍...
‍ஓர் இந்திய மூத்த குடிமகனும் குடிமகளும் அங்கு சுறுசுறுப்பாக நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வதை நாம் கண்டிப்பாக காணலாம்...

Gomathi said...

நன்றி சுதா! உங்கள் வாக்கு பலிக்கட்டும்! பேச்சுத்துணைக்கு சில‌ மூத்தகுடிமகன்/ள் வேண்டியிருக்கும். தயார் தானே?

raadh said...

ஆஹா! அற்புதமான தமிழ் வலைப்பதிவு! நல்ல தமிழில், எளிய நடையில் சுவாரசியமாக உள்ளது.
தங்கள் 'மனதில் தோன்றியவை', மக்கள் 'மனதில் நிறைந்தவை' யாக என்றும் இருக்க வாழ்த்துக்கள்! தமிழ்ப் பணி தொடரட்டும்.

Gomathi said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!