மனித மூளை அற்புதமானது. அது நாம் காலையில் விழித்தவுடன் பணிபுரிய ஆரம்பிக்கிறது. அலுவலகத்துக்குள் நுழையும் வரை அயராது பணிபுரிகிறது.
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். அதைப் போல ஒவ்வொரு வெற்றி பெற்ற பெண்ணுக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறான், எப்படி சாத்தியம் என சிந்தித்தபடி.
நேரம் தவறாமல் இருப்பதில் உள்ள சிரமம் என்னவென்றால் அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போது பாராட்ட எவரும் இருப்பதில்லை.
அதிர்ஷ்டத்தைக் கண்டிப்பாய் நான் நம்புகிறேன். நமக்குப் பிடிக்காதவர்கள் வெற்றி பெறுவது குறித்து வேறு என்ன சாக்கு சொல்ல முடியும் ?
வாழ்வில் நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் ஜெயிக்கிறேனா இல்லையா என்பது தான் விஷயம்.
வாழ்க்கை இனிமையானது. சாவு அமைதியானது, இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் தான் பிரச்சனையானது.
பிரச்சனையில் இருக்கும் மனிதருக்கு உதவுங்கள், அப்போது தான் அவர் மறுபடி பிரச்சனையில் இருக்கும் போது மட்டும் உங்களை நினைப்பார்.
கடினமான பிரச்சனைகளுக்கு எளிய, சுலபமாய் புரியக்கூடிய பல தவறான தீர்வுகள் உண்டு.
பணத்தால் சந்தோசத்தை விலைக்கு வாங்க முடியாதுன்னு யார் சொன்னது? எந்தக் கடையில கெடைக்கும்னு அவங்களுக்கு தெரியலை! அவ்வளவுதான்.
ஒரு சுடான தோசைக் கல் மீது ஒரு நிமிடம் அமரும் போது அது ஒரு மணி நேரம் போல இருக்கிறது, ஒரு அழகான பெண் அருகில் அமர்ந்து பேசும் போது ஒரு மணி நேரம் கூட ஒரு நிமிடம் போல இருக்கிறது. இது தான் Relativity theory.
No comments:
Post a Comment