எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தற்போது எங்கு பார்த்தாலும் ஒலிக்கும் தாரக மந்திரம் இது! ஏப்ரல் மாதம் வரும்போதெல்லாம் 'தமிழ்! தமிழ்!' என தமிழைக் கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர்!
பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகங்கள் வரை இயல், இசை நாடகம் என எல்லா விதத்திதிலும் போட்டிகள் நடத்தி தமிழ் வளர்க்கின்றனர். இவர்கள் ஒருபுறம் என்றால் சமூக ஆர்வலர்கள் மறுபுறம் பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் என தங்கள் பங்கிற்கு தமிழ் வளர்க்கின்றனர். இவர்களுக்கு நடுவில் புள்ளிகள் (points )ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஊண், உறக்கமின்றி பா(டாய்)டு படும் பிள்ளைகள் ஒருபுறம்!
வேறொரு பக்கம் வானொலியும் தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்
கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தி, கண்ணுக்கும், காதுக்கும் தமிழ் விருந்து படைக்கின்றன.
ஆனால் இவையெதுவுமின்றி இங்கு தமிழ் நன்றாக வளரும், எல்லோரும் மனது வைத்தால்!'
ஆம்! இங்கு நன்றாகத் தமிழ் பேசும் ஆயிரக்கணக்கான தமிழகத் திறனாளர்களும், அவர்களது குடும்பங்களும், பல்லயிரக்கணக்கான ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் நட்புணர்வுடன், கலந்துறவாடி பழகி வந்தாலே போதும், ஒரு தமிழ் என்ன, (மன்னிக்கவும், தமிழ் ஒன்றுதான்!) பல தமிழ், அதாவது வட்டார பேச்சு வழக்கத்தினால் சந்தத்தில் சற்று மாறுபட்டு, தனித்துவம் பெற்று விளங்கும் நெல்லைத்தமிழ், நாஞ்சில் தமிழ், சிவகங்கைத்தமிழ், மதுரைத்தமிழ், தஞ்சைத்தமிழ், கொங்குத்தமிழ், இவையெல்லாம் கலந்த சென்னைத்தமிழ், இன்னும் இலங்கைத் தமிழையும் கூடக் கற்றுக்கொள்ளலாம்!
மொழி மட்டுமா? மொழியோடு தொடர்புடைய கலாச்சாரம், பண்பாடு,... இத்யாதி விசயங்களும் தன்னால் வந்துவிடும்!
ஆனால், இது சாத்தியமா? புறப்பட்ட இடம் ஒன்றுதான் என்றாலும், முதல் இரயிலில் வந்தவர்களுக்கு இரண்டாம் இரயிலில் வந்தவர்கள் வேற்றுக் கிரக வாசிகளாக அல்லவா தோன்றுகிறார்கள்?
'வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு....."
6 comments:
Hats off to you !!,for voicing out what was in our (sorry,MY) mind too .
Co-incidentally, we were at one such function, organised in conjunction with this, last evening.I did see few of the men -atleast the organising team , clad in our traditional dhoti!At first, i thought these people in dhoties were going to enact a play.
Not that it was something wrong-( but, as rightly said by you)-there are many a times when i have seen men in shorts and unethical clothes,in places of worship- i mean , our Hindu temples!( which does call for some conduct in dress code, with respect to our ethnic group atleast, leave alone the rest ) Whatever they feel like, is what they wear , to such places and why , why was it that they wanted to come traditionally dressed , for the tamil vizha alone !!!!
A simple 'reunion' with all our existing brotherhood, irrespective of the time period, will definitely go a long long way , in easily achieving our goals !
ஆமாம்! நானும் பலமுறை நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் கோவில் 'தரிசனங்களைக்' கண்டு மனம் வெம்பியிருக்கின்றேன்!
இதைப் பற்றித் தனியே ஒரு பதிவில் எழுதும் எண்ணமும் இருக்கிறது!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
அவ்வளவும் உண்மை.... தமிழை வளர்க்க வேண்டும் என்று வளர்த்து விட முடியாது. மக்கள் அனைவரும் அன்பு பாராட்டி, கலந்து பழகி, உறவாடினால்..... இவையெல்லாம் தமிழில் செய்தால், தமிழ் தானாக வளரும், செழிக்கும்! இவையெல்லாம் நடக்குமா? பார்க்கலாம்.....
மனமிருந்தால் மார்க்கமுண்டு!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Migavum arumaiyana padhivu ethu.
Enjoyed reading your write-up. Agree with you more. Not only in dress code, language, hospitality, humanity...culture teaches and shapes a person.
வணக்கம் என் புதிய தோழியே! வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி! புதுப் புது நண்பர்களை அறிமுகம் செய்யும் வலைப் பூவுக்கும் நன்றி!
Post a Comment