Monday, April 19, 2010

சரி நிகர் சமானமாய்...(இதுவும்)

ஆண் பிள்ளைகளுக்கு இதைக் கற்றுக்கொடுப்போம், அதைக்கற்றுக் கொடுப்போம் என்றெல்லாம் சொன்னேன். எல்லாம் சரிதான்! ஆனால், அவர்கள்  கற்றுக்கொடுக்காமலேயே வீட்டில் சில வேலைகளைச் செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்! 

அவையெல்லாம் ஆண்களின் வேலை என்று பெண்களும் சரி, பெண்பிள்ளைகளும் சரி அவற்றை கற்றுக் கொள்வதோ, செய்ய முயற்சிப்பதோ கூட கிடையாது!

அவையொன்றும் பெரிய வேலைகள் அல்லது விசயங்கள் கிடையாது. இருந்தாலும் பெரும்பாலும் பெண்கள், " ம்.. இதையெல்லாம் ஆண்கள் பார்த்துக் கொள்வார்கள், நம‌க்கென்ன?" என்று கண்டுகொள்வதேயில்லை!  என்ன அவை?

வீட்டு உபகரணங்கள் செயல்படாமல் போவது, கடிகாரங்கள் ஓடாமல் நிற்பது, பிரின்ட்டர் டோனர் காலியாகிவிடுவது, கணினி ஹேங் ஆவது,  இணைய இணைப்பு தடைபடுவது,  திடீரென வீட்டில் மின்தடை ஏற்படுவது (ஏதேனும் காரணமாக ட்ரிப் ஆவதுண்டல்லவா?) போன்ற சமயங்களில் என்ன செய்வது போன்ற விசயங்களில் பெண்களும் சரி, பெண் பிள்ளைகளும் சரி, அது நம்முடைய வேலையில்லை என்று இருந்துவிடுவார்கள்.

ஆனால், ஆண்பிள்ளைகள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கையில் ஸ்க்ரூ டிரைவரை எடுக்கவும் தயங்குவதில்லை! அவர்கள் இது போன்ற சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று தம் தந்தையைப் பார்த்துக் கற்றுக்கொள்கின்றனர்!  இம்மாதிரி விசயங்களை பெண்களும் பெண்பிள்ளைகளும்  கற்று வைத்துக்கொள்ளவேண்டும்!

சில சமயங்களில் வேலை காரணமாக ஆண்கள் வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது வீட்டில் இம்மாதிரியான சூழ்நிலைகள்  ஏற்படும்போது (எப்போதும் அப்போது தான் ஏற்படும்!) சமாளிக்கும் திறமை பெண்பிள்ளைகளுக்கும் இருக்கவேண்டும்!

எல்லாவற்றுக்கும் வெளியே சென்ற ஆண்கள் வந்து பார்த்துக் கொள்ளட்டும் என்று சும்மா இருக்கக் கூடாது.

மேற்கூறிய பிரச்சினைகள் எல்லாம் ஒரு பெரிய விசயமே கிடையாது. நாம் ஏதோ இவையெல்லாம் 'ஆண்கள்  வேலை' என்று வாளாவிருப்பதினால்தான் கடைசிவரை அவற்றை முயற்சி செய்துகூட‌ பார்க்காமல், அவை தெரியாத விசயமாகவே போய்விடுகிறது! எல்லாம் பழகினால் தன்னால் வந்துவிடும்!

நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில் சொல்லிருப்பார்,  "எவ்வளவோ செய்துவிட்டோம்: இதைச் செய்ய மாட்டோமா  என்ன‌?" என்று.  அதேதான்!

4 comments:

Vikis Kitchen said...

Very nice post.I guess the word 'Equal rights' should be uttered with more common sense here after:) Never thought about the other side of the coin:)

Gomathi said...

தொடர் வருகைக்கு நன்றி விக்கி!

ஒரு விசயத்தை நாம் ஒரே கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பதை விடுத்து கொஞ்சம் மாற்றி யோசிக்கும்போதுதான் நீங்கள் சொன்ன அந்த 'நாணயத்தின் மறுபக்கம்' கண்ணுக்குத் தெரிகிறது!

raadh said...

முந்தைய கட்டுரையை படித்தபோது அதில் சீரிய கருத்தும், அதைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற நோக்கமும் தெரிந்தது. ஆனால் ஏனோ இந்த இரண்டாம் கட்டுரையில், அவசர அவசரமாக பெண்ணுக்கும் கருத்து கூறியுள்ளது போல் தோன்றுகிறது! ஆனால் அவசரத்தின் அவசியமும் புரிகிறது! நல்ல கருத்து, நல்ல எழுத்து!

Gomathi said...

அவசரம் எதுவும் இல்லை, நிச்சயமாக அவசியம் மட்டுமே கருதி எழுதிய விசயம் அது! (நான் எப்போதும் நடுநிலை தவறுவதில்லையாக்கும்!)

இருந்தாலும் (கண்டுபிடிச்சிட்டீங்களே:)) நன்றி!