நான் ஒரு அனுபவ உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
'நெல்லிக்காய்ச் சாற்றை தினமும் அருந்திவந்தால் நீரிழிவு நோயைக் குணப்படுத்தலாம்'
என்று ஒரு பாட்டி சொன்ன வைத்தியத்தைக் கேட்டு கிட்டத்தட்ட ஈராண்டு காலமாகக் கடைபிடித்து வருகிறோம். அதன் பலன் நாங்கள் கண்கூடாக கண்ட உண்மை. ஆம், இப்போது பிற, சாதாரண, ஆரோக்கியமானவர்களைப் போலவே இரத்தத்தின் சர்க்கரை அளவு இருப்பதை சமீபத்திய இரண்டு பரிசோதனை முடிவுகள் (ஆறு மாதங்களில் இரண்டு) காட்டுகின்றன.
நெல்லிக்கனிக்கு மேலும் பல மருத்துவ குணங்களும் உண்டு.
அவற்றுள் நான் அறிந்தவை சில...
1. விட்டமின் சி அதிகமாக காணப்படுவதால் தினமும் உண்டுவர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. நெல்லிக்காய்ச் சாறு தலைமுடியைக் கறுப்பாகவும், செழுமையாகவும் வளரச்செய்யும்.
3. கண் பார்வை தெளிவு பெறும்.
4. இளமையைப் பாதுகாக்கும்.
இவ்வரிய குணங்கள் கொண்டதால் அல்லவா அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனியைப் பரிசாகத் தந்தார்?
நரை,திரை,மூப்பைத் தள்ளிவைக்கும் ஆற்றல் பெற்ற நெல்லிக்காயை நாம் தள்ளிவைக்கலாமா?
(பி.கு: நெல்லிக்காய் வைத்தியத்தோடு, கண்டிப்பான உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மேற்கொள்தல் அவசியம்!)
No comments:
Post a Comment