Monday, November 17, 2008

ஒரு விடிந்தும் விடியாத இனிய காலைப் பொழுது! அப்போது மலர்ந்தும் மலராத ஐந்து அல்லது ஆறு மாதக் கைக்குழந்தையுடன் ஓர் இளம் பெண் அலுவலக உடையில் துரித நடையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள்.
அவள் செல்லும் வேகத்தைப் பார்த்தால் அருகிலிருக்கும் தன் தாய் அல்லது உறவினர் வீட்டில் கொண்டுபோய் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் செல்பவள் போல் தோன்றியது. ஒருவேளை குழந்தைகள் காப்பகத்திற்காகக் கூட இருக்கலாம்.
கள்ளம் இல்லாத வெள்ளைச் சிரிப்புடன் அக்குழந்தை தன் பின்னால் வருபவர்களை எல்லாம் குறுகுறுவென பார்த்துக்கொண்டே சென்றது.
பாவம்! அது தன் தாயின் கதகதப்பில் இருக்கும் சொற்ப நேரம் அது! அதன் பிறகு மீண்டும் மறு நாள் தான் இந்த சந்தோசம் கிடைக்கும். ஆம், மாலை அல்லது இரவு களைத்துத் திரும்பும் தாயிடமிருந்து வேறு எப்போது இந்த அரவணைப்பு கிடைக்கப்போகிறது?
அந்தப்பெண்ணைப் பார்த்தாலும் பாவமாகத்தான் தோன்றியது. பெற்றக் குழந்தையை வீட்டிலிருந்து கவனிக்கமுடியாமல் வேறொருவரை நம்பி விட்டுவிட்டு, அலுவலகத்திலும் குழந்தை நினைவுடனேயே வேலை செய்யும் நிலையும் பாவமாகத்தான் இருக்கிறது!
ஒரு பாலர் பள்ளிக்குச் செல்லும் வரையாவது பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள முடியாதா?
அது அவ்வளவு சிரமமான காரியமா? நான் குழந்தை வளர்ப்பைச் சொல்லவில்லை. ஒரு மூன்று வருடகாலம் இளம்தாய்மார்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருப்பது என்பது இயலாத செயலா? அதுவும் சிங்கப்பூர் போன்ற ஒரு பணக்கார நாட்டில்?
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே!

2 comments:

Nivedha G said...

I guess it all depends on the family's situation...but then again, the child definitely deserves more of the parent than anyone else at such a young age..

Gomathi said...

Yes, you are right ma. I am just worried about these children.